21 அல்ல!!:சோறுதான் முக்கியம்!21வது திருத்த சட்டத்தை ரணில் தரப்பு நமுத்துப்போக செய்வதில் முனைப்பு காண்பித்துவருவதாக சஜித் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளார்.

 இந்நிலையில் 21 ஆவது திருத்தச் சட்டத்தை வைத்து அரசியல் செய்வதை விடுத்து அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான கூட்டு கட்டமைப்பை ஏற்படுத்துவதில் அனைத்து அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதனை உறுதி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது  மக்கள் 21 ஆவது திருத்தச்சட்டத்தை விட எரிபொருள், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களையே விரும்புவதாகவும்  வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments