இலங்கை:மீண்டும் எகிறியது எரிபொருள்!இலங்கையில் எரிபொருளின் விலைகளில் இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் அமலுக்கு வரும் வகையில் அதிகரிப்பொன்றை இலங்கை அறிவித்துள்ளது.

அந்தவகையில் 92 ரக ஒக்டேனின் விலையானது லீற்றரொன்றுக்கு 338 ரூபாயிலிருந்து 82 ரூபாயால் அதிகரித்து 420 ரூபாயாகக் காணப்படுகிறது.

ஓட்டோ டீசலின் விலையானது லீற்றரொன்றுக்கு 289 ரூபாயிலிருந்து 111 ரூபாய் அதிகரித்து 400 ரூபாயாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில், சுப்பர் டீசலின் விலையானது லீற்றரொன்றுக்கு 329 ரூபாயிலிருந்து 116 ரூபாய் அதிகரித்து 445 ரூபாயாகக் காணப்படுகின்றது.

தவிர, ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையானது லீற்றரொன்றுக்கு 373 ரூபாயிலிருந்து 77 ரூபாய் அதிகரித்து 450 ரூபாயாகக் காணப்படுகின்றது.

No comments