மகிந்த நாய்க்குட்டி மக்கள் ஜக்கிய சக்தியில்!இலங்கையில் கடந்த 9ஆம் திகதி உட்பட நாடு முழுவதும் நிலவிய அமைதியின்மைக்கு மத்தியில்  ராஜபக்ஷவின் மெதமுலன வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வேளை  அங்கிருந்த  நாய்க்குட்டிகள் காணாமல் போயிருந்தன.

காணாமல் போன நாய்க்குட்டிகளில் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த  வீரகெட்டிய பிரதேச சபை உறுப்பினரின்  மகளுடன் இருந்த போது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதேச சபை உறுப்பினரின் மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி இரவு போராட்டக்காரர்களால் வீடு தாக்கி சேதப்படுத்தப்பட்ட போது, ​​வீட்டின் பின்பகுதியில் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல நாய்க்குட்டிகள் காணாமல் போயிருந்தன.

வீரகெட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments