கச்சதீவு வாடகைக்கு:தெரியாதென்கிறார் டக்ளஸ்!



இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட கச்சதீவினை இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அவ்விடயம் அரசியலிற்காக பேசப்பட்ட விடயமோ தெரியாது, ஆனால் குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெற்றதாக தெரியவில்லை. அவ்வாறு கச்சதீவினை இந்தியாவிற்கு வழங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாதென மீண்டும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் பதவியை பொறுப்பேற்றிருக்கும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசிற்கு வழங்கப்பட்டுவரும் கடன்களிற்காக பதிலீடாக தீவகப்பகுதிகளில் இந்தியா கால்பதிக்க அரசு அனுமதித்துள்ளது.அத்துடன் கச்சதீவை குத்தகைக்கு வழங்க சம்மதித்துள்ளதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியிருந்தனர்.

இத்தகைய சதிகள் பற்றி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments