முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம்: அம்பாறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளிவாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை  அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில்  அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி  தலைமையில்  திருக்கோவில் மண்டானை பிள்ளையார் ஆலயத்தில்  ஒன்று கூடியவர்கள் உப்பில்லாத கஞ்சியினை அவ்விடத்தில் காச்சியதுடன் அதனை சிரட்டையில் கொண்டு வீதியினால் சென்றோர்கள் மற்றும் பஸ் தரிப்பிடங்களில் இருந்தோர்கள் என பலருக்கும் வழங்கினார்கள். அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி என்ற துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

No comments