போயே போச்சு?



கோட்டகோகமவில் இன்று காலை இடம்பெற்ற மோதல் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதுவரை 130 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே  மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களின் போக்குவரத்திற்கு பயன்படுத்தபட்ட பேருந்தொன்று கண்டியில்  தீக்கிரையாக்கப்பட்டது.

கொழும்பு பஞ்சிகாவத்தை மருதானை வீதியில் மினி ரக பஸ் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மோதலில் ஈடுபட்ட அனைவரையும் அரசியல் கட்சி வேறுபாடின்றி கைது செய்யுமாறும், மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே  அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி கோ கோட்டா கம போராட்டத்தை அரசாங்கம் சீர்குலைத்தால், அரசாங்கத்துடன் மேற்கொள்ளும் அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகிக்கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இந்த விடயம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.



No comments