பாதுகாப்பில்லாவிட்டால் விலக நேரிடும்!

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் போக்குவரத்து பாதுகாப்பற்றதாக உள்ளதாக பெட்ரோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. உரிய பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலக நேரிடும் என எச்சரித்துள்ளது.

ஒன்றியத் தலைவர் டி.வி. சாந்த சில்வா, நிலைமையை விளக்கி, எரிபொருள் ஏற்றிச் செல்லும் டேங்கர் பாரவூர்திகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாடு நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், டேங்கர் ட்ரக் சாரதிகளின் உயிருக்கும் டேங்கர் பாரவூர்திகளின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாக சில்வா மேலும் தெரிவித்தார்.

No comments