கொட்டி தேசம் சோறு போடுகின்றது?

இலங்கை மக்களுக்காக தமிழக அரசினால், மேலும் 30,000 டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதற்கமைய, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து, 30,000 டன் அரிசி தூத்துகுடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த அரிசியை தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய 10 கிலோகிராம் பைகளில் பொதியிடும் பணிகள், தூத்துக்குடி துறைமுகத்தில் இடம்பெற்று வருகின்றன.

குறித்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், அரிசியைப் பொதியிடும் பணிகள் நிறைவடைந்ததும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.


அத்துடன், பால்மா மற்றும் மருந்துகளும் சேகரித்து அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு, தமிழகத்திலிருந்து 80 கோடி இந்திய ரூபா மதிப்பில் 40,000 டன் அரிசி, 28 கோடி இந்திய ரூபா மதிப்பிலான மருந்து பொருட்கள் மற்றும் 15 கோடி இந்திய ரூபா மதிப்பிலான 500 டன் பால்மா முதலான அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதற்கமைய, சென்னையில் இருந்து கப்பல் மூலம் 10,000 டன் அரிசி, பால்மா மற்றும் மருந்துகள் என்பன கடந்த வாரம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments