மன்னாரிலும் 14பேர் அகப்பட்டனர்!வடகிழக்கிலிருந்து தப்பித்து கடல்வழியே செல்ல முற்படுபவர்களை வேட்டையாடுவது தொடர்கின்றது.

மன்னார் பேசாலைப் பகுதி ஊடாக தமிழகத்திற்கு செல்ல முற்பட்டதாக 14 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் பேசாலை  கடற்பகுதியிலேயே் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னார்  பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14பேரும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது..

No comments