கலக்கத்தில் இலங்கை நாடாளுமன்றம்?இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினர் எவ்விதமான இடையூறுகளும் இன்றி, பாராளுமன்றத்துக்குச் செல்லும் வகையில், பாராளுமன்றத்துக்கு செல்லும் சகல வழிகளிலும் மூடப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றும் நாளையும் (06) பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட விருப்பதாக கிடைத்த தகவல்களுக்கு அமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என இலங்கை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

காரை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments