டக்ளஸ் -மகிந்த அமரவீர சண்டை?சிறீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்திற்கு முரணாகவே அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்துள்ளார்.

அமைச்சு பதவிகளை பொறுப்பேற்காமல் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவே கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது  எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதிய அமைச்சரவையிலும் கடற்றொழில் அமைச்சைக்கோரி டக்ளஸ் உள்வீட்டு அரசியலை முன்னெடுத்துள்ளார்.இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடற்றொழில் அமைச்சினை கேட்டு அடம் பிடித்தமையினால் இருவருக்கும் அமைச்சுப் பதவிகள்; வழங்கப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மகிந்த அமரவீர ஆகிய இருவருமே கடற்றொழுல் அமைச்சுதான் வேண்டும் என கடும் போட்டி நிலவுவதனால் கடற்றொழில்  அமைச்சுஇரு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் வழங்கப்படவில்லை.


No comments