கொடிகாமத்தில் காணி பிடிக்கும் ஆமி!

கொடிகாமம் பகுதியில் தமிழீழ மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த தனியார் காணியை இராணுவ முகாமுக்காக அளவீடு செய்ய இன்றும் முயற்சிகள் நடந்துள்ளன.

கொடிகாமம் மத்தியில் பருத்தித்துறை வீதியில் தனியாருக்கு சொந்தமான துயிலுமில்ல காணியை இராணுவ முகாமுக்கு  அளவிடப்பட்ட நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.பொது மக்களின் எதிர்ப்பையடுத்து அளவீட்டு நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு இலங்கை படைகளால் கைப்பற்றப்பட்டதையடுத்து இராணுவத்தின் 15து கஜபாகு படைப் பிரிவினர் துயிலுமில்லத்தை இடித்தழித்து முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில் நிலைகொண்டுள்ள படையினருக்கான முகாமினை நிரந்தரமாக்க காணி அளவீடுசெய்யப்படவிருந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.


No comments