அறிக்கை மேல் அறிக்கை:இலங்கை அரசியல்!இலங்கைப்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன் றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்ததையடுத்து, புதிய பிரதி சபாநாயகர் ஒருவர் இன்று பெயரிடப்படவுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை பிரதி சபாநாயகர் பதவிக்கு நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி நேற்று தீர்மானித்துள்ளது.

ஆளும் கட்சியால் அந்தப் பதவிக்கு பெயர் முன்மொழியப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை வைத்திருக்கும் கட்சியை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments