கோத்தாவின் பினாமி:துமிந்தவும் தப்பித்தார்!ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கத்தை பேணி வரும் முக்கியங்கள் பலவும் நாட்டை விட்டு தப்பித்துவருகின்றன.

ராஜபக்சக்களது பினாமியென அடையாளப்படுத்தப்பட்ட நடேசன் குடும்பம் தப்பித்த நிலையில் தற்போது கோத்தாவிற்காக தமிழ் இளைஞர் யுவதிகளை கொழும்பில் வேட்டையாடிய துமிந்த சில்வாவும் தப்பித்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.  

வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ் கிவ் 469 எனும் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி  அவர் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments