சந்திரிகாவும் விளக்கேற்றினார்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் போரின் முடிவைக் கொண்டாடும் நேரத்தில் வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம். பழிவாங்குவதற்கு பதிலாக மன்னிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

"ஒரு நாட்டையோ மனித இனத்தையோ போரினால் தோற்கடிக்க முடியாது, முப்பது வருட இனப்படுகொலைப் போரில் நாம் இழந்தவை ஏராளம். வடக்கிலும் தெற்கிலும் உள்ள தாய்மார்கள் பிள்ளைகளை இழந்துள்ளனர். பிள்ளைகள் பெற்றோரை இழந்தனர். நாங்கள் சிங்களவர், தமிழ், முஸ்லிம் என பிரிந்துள்ளோம்.

போரினால் நான் ஒரு கண்ணை இழந்தேன். இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. போரின் முடிவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் வெறுப்புக்குப் பதிலாக அன்பைக் காட்டுவோம் என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


No comments