மரியுபோல் உருக்கு தொழிற்சாலையிலிருந்து ஆயிரம் போராளிகள் சரண்


மரியுபோல்  உருக்கு தொழில் சாலையில் நிலக்கீழ் அறைகளில் தங்கியிருந்த கிட்டத்தட்ட 1,000 உக்ரைனியன் போராளிகள் சரணடைந்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உக்ரேனிய இராணுவம் மற்றும் அசோவ் படைப்பிரிவைச் சேர்ந்த 694 போராளிகள்  சரணடைந்த உள்ளனர் ரஷ்யா தெரிவித்துள்ளது.

மொத்தமாக 959 பேர் சரணடைந்துள்ளதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

மரியுபோல் துறைமுக நகரில் உக்ரைனின் இறுதிக் கட்டுபாட்டில் உள்ள உருக்கு தொழில் சாலையை ரஷியப் படைகள் படிப்படியாக கட்டுப்பாட்டில் எடுத்து வருகின்றன.

உக்ரேனிய அதிகாரிகள் எத்தனை போராளிகள் வெளியேறினர் அல்லது சரணடைந்தனர் என்பது பற்றி தகவல்களை வெளியிடவில்லை.

No comments