கோத்தா சோதிடர் ஞானக்காவிற்கு இராணுவ பாதுகாப்பு!கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களின் புகைப்படங்களை வெளியிட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ஏன் அவர்கள் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே மே 9 ம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டமை தொடர்பில் மொரட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுமுல்ல பகுதியில் சிஐடியினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக ஒன்றுகூடினார்,பொதுச்சொத்துக்களிற்கு சேதம் விளைவித்தார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த வார வன்முறைக்கு பின்னர் முதல்தடவையாக ஜனாதிபதி நேற்று பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தவேளை கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

கடந்த வார வன்முறைக்கு பின்னர் முதல்தடவையாக ஜனாதிபதி நேற்று  பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தவேளை சந்;திப்பில் கடும் குழப்ப நிலை காணப்பட்டது.

ஜனாதிபதியின் ஜோதிடர் ஞானாஅக்காவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறித்து சுட்டிக்காட்டிய பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல்  கும்பல்களின் வன்முறையை எதிர்நோக்கிய அதேவேளை ஞானா அக்காவிற்கு ஏன்  இராணுவத்தினர் பாதுகாப்பை வழங்கினார்கள் என  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு அழைக்கப்பட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிற்கு எதிரான வன்முறைகளை தடுக்க தவறியமைக்காக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.

செவ்வாய்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது  பிரதிசபாநாயகர் தெரிவு குறித்து ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்திருந்தார்.ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிற்கு என்ன நடந்தது என்பது  குறித்தே விவாதிக்க விரும்பினார்கள்.வன்முறை காரணமாக தங்கள் 60 வீடுகளும் அலுவலகங்களும் அழிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

தங்கள் வீடுகளையும் வாகனங்களையும் அலுவலகங்களையும்  பொலிஸார் பாதுகாக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினார்.

தனது வாகனம் சேதமாக்கப்பட்டதால் நான் இன்றைய கூட்டத்திற்கு வானிலேயே வந்தேன் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்தை தெரிவித்தார்.

தனது வீடுகளும் வாகனங்களும் சேதமாக்கப்பட்டதால் சிறிய எஸ்யுவி வாகனத்தில் பயணித்ததாக முன்னாள் அமைச்சர் சந்திரசேன தெரிவித்தார்.

வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்களை கட்;டு;ப்படுத்துவதற்காக பொலிஸ்மா அதிபரும் இராணுவத்ளபதியும் உரிய உத்தரவுகளை வழங்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாத ஜனாதிபதி பொலிஸ்மா அதிபரை உடனடியாக அழைத்தார்.

ஜனாதிபதிக்கு கடுமையான பதிலை வழங்கிய பொலிஸ்மா அதிபர் அரசியல் தலையீடுகள் காரணமாக- அரசியல் நியமனங்கள் காரணமாக  சட்டமொழுங்கு பாதிக்கப்படலாம் என மூன்று மாதங்களிற்கு முன்னரே தான் எச்சரித்ததாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்


No comments