''கோ கோம் கோட்டா'' 100 அடி மரத்தில் நின்று போராட்டம்
இலங்கையில் நோர்வூட் - டிக்கோயா - இன்ஜஸ்ரி பகுதியில் 44 வயதுடைய பொதுமகன் ஒருவர் மரமொன்றின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், ரம்புக்கனையில் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அதற்கு நீதி கோரியும், குறித்த நபர், இன்று வியாழக்கிழமை (21) காலை இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
சுமார் 100 அடி உயரமான மரத்தின் மீதேறி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர் ''கோ கோம் கோட்டா'' காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், ரம்புக்கனையில் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அதற்கு நீதி வேண்டும் என்ற சுலோகங்களை அடங்கிய பதாதையை மரத்தின் கீழ்ப்குதியில் கட்டியிந்தார்.
Post a Comment