இலங்கையில் கூண்டோடு அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகினர்??


சிறீலங்கா அதிபர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இடையானா சந்திப்பைத் தொடர்ந்து கோட்டபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவைத் தவிர்ந்து அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளிலிருந்து கூண்டோடு பதவி விலகியுள்ளனர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை அமைச்சர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் தமது பதவி விலகல் கடித்தைதத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வழங்கியதாக கல்வி அமைச்சரும், சபைத் தலைவருமான தினேஷ் குணவர்தன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேபோன்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பதவி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் மகனும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அமைச்சு பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன ஆகியோரும் கையொப்பம் இடவில்லையென என மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கடுமையாக திட்டியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர். இன்றும் ஊடரங்கு அமுலிலில் உள்ள நிலையில் மக்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

No comments