இலங்கையை அவதானிக்கின்றோம் - ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை


இலங்கையில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.

இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியான போராட்டங்கள் மூலம் மக்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நிலையில், அந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

போராட்டங்களின் போது அமைதியை நிலைநாட்ட ஜனநாயகரீதியாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டவையாக அமைய வேண்டும் என்றும் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இந்த நெருக்கடி நிலைமையை தணிப்பதற்கான அரசாங்கத்தின் இயலுமை மீது இராணுவமயப்படுத்தப்பட்ட நகர்களில் ஏற்பட்ட சறுக்கல்கள் தாக்கம் செலுத்தியுள்ளன.

இந்த சூழ்நிலையில் அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பன இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைகளுக்கு வினைத்திறனான தீர்வினை எட்ட முயற்சிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

No comments