ராஜபக்சக்களது பினாமியும் தப்பித்தார்!



முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக டுபாய் நோக்கி பயணித்துவிட்டார்.

நேற்றிரவு 10.25 புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ரி.கே. 655 என்ற விமானத்திலேயே டுபாய் நோக்கி பயணிமாகியுள்ளார் என குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, அவரது கணவர்   திருக்குமரன் நடேசன்  ஆகிய இருவரும் பெண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்ற பெயரில் வெளியான ஆவணங்களில் நிதிமோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 முன்னதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் அவருடைய பெற்​றோர் உட்பட ஒன்பது பேர், நாட்டை விட்டு சென்றுவிட்டனர்.

No comments