கோட்டாவை பதவி விலகு!! நாடாளுமன்றில் போராட்டம்!
சிறீலங்கா அதிபர் கோட்டாபாயவை பதவி விலகுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீலங்கா நாடாளுமன்றில் போராட்டம் ஒன்றை நடத்தினர். 

நாடாளுமன்றில் நடைபெற்ற சிறப்பு விவாத்தின்போதே இப்போராட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உரையாற்றும்போதே  இப்போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நடத்தினர்.

இதேநேரம் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உரையாற்றும் போது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்ன்டோ குறுக்கிட்டு பதிலளித்ததை அடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பாராளுமன்றம் இன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது சிறீலங்கா அதிபர் கோட்டாபாயவை பதவி விலகுமாறு  வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றம் 5 நிமிடங்கள் ஒத்திவைக்க்பபட்டது.

கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி 'வீட்டுக்கு போ' என கோஷங்களை எழுப்பியவாறு எம்பிக்கள் பதாதைகளை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏந்தியிருந்தனர்.

No comments