இராணுவத் தளபதியுடன் மது விருந்து: சாட்சிகளுடன் ரோமில் பேராயர்!

இனஅழிப்பினை மூடி மறைத்து இராணுவ அதிகாரியொருவருடன் மதுவிருந்தில் பங்கெடுத்ததாக தமிழ் ஆயர் ஒருவர் மீதான குற்றச்சாட்டு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

மது விருந்து தகவல் கசிந்ததடையடுத்து குறித்த மாவட்ட இராணுவ தளபதி இராணுவ தலைமையகத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்  மத்தியில்  புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுடன் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் இன்று (22) காலை ரோம் நகருக்குச் சென்றுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர்கள் உட்பட பாதிக்கப்பட்ட சுமார் 60 பேர் இந்த விஜயத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக, திருத்தந்தையின் அழைப்பின் பேரில் கர்தினால் மால்கம் ரஞ்சித் வத்திக்கானுக்கு விஜயம் செய்திருந்தார்.

இலங்கை கோத்தா அரசே ஈஸ்டர் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சுமத்தி நேற்று கருத்து வெளியிட்டுள்ள நிலையில் இன்று சாட்சியங்களுடன் ரோம் பயணித்துள்ளார். 


No comments