கோத்தா போனால் பஸில் வருவார்!கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கினால் பசில் ராஜபக்ஷ பதில் ஜனாதிபதியாக வரக்கூடிய அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

“முதலில் பிரதமரும் அவரது அமைச்சரவையும் ராஜினாமா செய்ய வேண்டும். நம்பிக்கையையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்பக்கூடிய புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும். கோத்தபாய ராஜபக்சவும் வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். 

ஆனால், கோத்தபாய வெளியேறினால், 113 பெரும்பான்மையைப் பெற்றுள்ள மற்றொருவர் தற்காலிக ஜனாதிபதியாக வருவார். இப்போது தலைமறைவாக இருக்கும் பசில் ராஜபக்ச வெளியே வந்து 113ல் வெற்றி பெற்றால்? அப்போது பசில் பதில் ஜனாதிபதியாக வருவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

No comments