பிரான்சில் சூடு பிடிக்கவிருக்கும் அதிபர் வேட்பாளர் தேர்தல் விவாதம்
2022 ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தலில் பிரான்சின் இரண்டு வேட்பாளர்களான ஜனாதிபதி இம்மானுவேலும் தீவிர வலதுசாரியான மரைன் லு பென்னும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று போட்டியிடுகின்றனர்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாக்களிப்பில் இருவரில் ஒருவர் பிரான்ஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை இரவு இருவருக்கும் இடையிலான இரண்டரை மணி நேர விவாதம் நடைபெறவுள்ளது.
பிரான்ஸ் அதிபரை தேர்தெடுக்க இந்த இருவரின் விவாதம் மிக முக்கியமான கருதப்படுகிறது. அத்துடன் அவர்களுக்கான முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது. வாக்களிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இதேபோன்று 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற விவாதத்தை 16.5 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டனர். இந்த விவாத்தில் மரைன் லு பென் தோல்வியடைந்தார். மக்ரோனுக்கு 66.1 வீதமும் லு பென்னுக்கு 33.9 வீதமும் வாக்குகளைப் பெற்றனர். இத்தோல்வியை லு பென் சமீபத்தில் ஒப்புக்கொண்டிருந்தார்.
மொத்தத்தில் இரு வேட்பாளர்களுக்கிடையேயான விவாதம் பதட்டமாகவே பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு வாக்கெடுப்பில் மக்ரோன் இன்னும் முன்னணியில் இருந்தாலும், அது மிகக் குறைவான வித்தியாசத்தில் உள்ளது மற்றும் நெருக்கமான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்சோஸ் சோப்ரா/ஸ்டீரியாவின் சமீபத்திய கருத்துக்கணிப்பில் மக்ரோன் 56.5% முன்னணியில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. ற்ற கருத்துக் கணிப்புகள் ரன்ஓப்பில் மிகவும் கடினமான போட்டியைக் காட்டியுள்ளன.
Post a Comment