இராணுவ செலவே காரணம்:சி.வி



இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு காரணம் கட்டுக்கடங்காத இராணுவ செலவீனமேயென அம்பலப்படுத்தியுள்ளார்  சி.வி.விக்கினேஸ்வரன். 

1995 முதல் 2002 வரை - 1346 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும்,2002 முதல் 2005 வரையிலான அமைதி காலத்தில் - 1056 மில்லியன் அமெரிக்க டொலர்கள்,போரின் இறுதிக் கட்டத்தில், 2006 முதல் 2009 வரை - 1499 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இராணுவ செலவீனம் இருந்துள்ளது.

2015 ஆம் ஆண்டளவில் - சிறிசேன அரசாங்கத்தின் கீழ் "சமாதான காலத்தில்" - இலங்கையின் இராணுவம் ஆண்டுதோறும் 2.06 பில்லியன் டொலரை செலவழித்தது. 2019 இல், இராணுவ வரவு செலவுத் திட்டம் அதன் போர்க்கால உச்சத்தை விட அதிகமாக இருந்தது: வருடத்திற்கு 1.67 பில்லியன் டொலராகும்.

2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், ராணுவ வீரர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட அதிகரித்துள்ளதாகவும் சி.வி.விக்கினேஸ்வரன் அம்பலப்படுத்தியுள்ளார்.


No comments