சந்திரிகாவுடன் அவசர சந்திப்பில் அரசியல் கட்சி பிரமுகர்கள்


முன்னாள் அதிபர் சந்ரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் பல்வேறு அரசியல் தரப்பு பிரதிநிதிகளும்  அவசர சந்திப்பொன்றினை நடாத்தி கலந்துரையாடியுள்ளன. இந்த சந்திப்பு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு  மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,   பாராளுமன்ற உறுப்பினர்களான் குமார வெல்கம,  சம்பிக்க ரணவக்க,  ரஞ்சித் மத்தும பண்டார,  ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம்,  எம்.ஏ. சுமந்திரன், அனுர யாப்பா அபேவர்தன,  சுசில் பிரேம ஜயந்த,  கபீர் ஹாஷிம், எரான் விக்ரமரத்ன,  முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் இவ்வாறு பேச்சுக்களை நடாத்தியுள்ளனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை,   அரசியல் கலப்பற்ற இளைஞர்களின் தொடர் போராட்டம்,  அரசியல் ஸ்திரமற்ற நிலைமையை மாற்றி ஸ்திரமான அரசை உருவாக்கல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்கள் இதன்போது இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments