கோத்தாவிற்கு கால அவகாசம் வழங்கும் முன்னணி!ராஜபக்ச அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி தயாராகிறது.

தற்போதைய பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு அது நேரடி தாக்கம் செலுத்தும் என பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த விடயங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments