உள்ளே தள்ளிவிடுவார்களென மகிந்தவிற்கு பயம்! இன்னொரு அரசாங்கம் வந்தவுடன் அவர்கள் செய்த குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று பயம் ராஜபக்ச குடும்பத்தை பதவியை ஒட்ட வைக்க காரணமாகுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.

மகிந்தவை  விலகுமாறு மக்கள் கூறிய போதிலும் அவர்கள் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பது வெட்கக்கேடானது எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பதிலளித்தார்.

மஹிந்த ராஜினாமா செய்யப் போவதில்லை என்று கூறி வருகிறார். வேறொரு அரசாங்கம் அமைந்தாலும், அவர் தனது பிரதமர் பதவியை வைத்திருப்பதாக கூறுகிறாரேயென என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் “அவருக்கு பேராசை அதிகம். இன்னொரு அரசாங்கம் வந்தவுடன் அவர்கள் செய்த குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று ஒருபுறம் அவர் பயப்படலாம். மறுபுறம், ராஜபக்சக்களுக்கு இது போதாது. அவமானம்! அவர்கள் பதவி விலக வேண்டும் என்று மக்கள் அழைப்பு விடுத்தாலும், அவர்கள் இன்னும் தொங்குகிறார்கள் எனவும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.


No comments