குழப்பத்தில் தெற்கு!

 


ஜா-எல-கனுவான சந்திக்கு அருகில் இன்று (02) இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள தாங்க முடியாத பொருளாதார நெருக்கடிக்கு உடனடித் தீர்வைக் கோரி மக்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பல மணி நேர மின்வெட்டு, எரிவாயு, எரிபொருள், பால் மா மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு எதிராக இன்று நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.


இதனிடையே இன்று காலை பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்தியவர்களால் வீட்டிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட சிவில் உரிமை செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார தற்போது மோதரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை தங்களை மோதரை பொலிஸார் என தெரிவித்தவர்கள் அவரை அவரது வீட்டிலிருந்து அழைத்து சென்றனர்.
இதேவேளை முன்னதாக அனுருத்த பண்டாரவை கண்டுபிடிக்க உதவுமாறு கோரி இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது.
தங்களை பொலிஸார் என அடையாளப்படுத்தியவர்களால் அவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டார் எனினும் மோதரை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி அவ்வாறு எவரும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்தார் என ஊடகவியலாளர் அமைப்பு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இதனிடையே இளம் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவின் எந்த செயல் அவர் கைதுசெய்யப்பட காரணம் ? அம்பிகா சற்குணநாதன் கேள்வி
கருத்துச்சுதந்திரத்தையும் மாற்றுக்கருத்தையும் நசுக்குவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் பயன்படுத்திய- பயன்படுத்தக்கூடிய தெளிவற்ற பரந்துபட்ட சட்டவிதியை பயன்படுத்தி இளம் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவின் எந்த செயல் அவர் கைதுசெய்யப்படுவதற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments