பதவி விலகிய வேகத்தில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம்!


சீறீலங்காவில் அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

புதிய அமைச்சரவை அமைச்சர்களில் நான்கு பேர் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு அதிபர் கோட்டபாய முன்னிலையில் பதவிப் பிரமாணங்களை எடுதுக்கொண்டுள்ளனர்.

ஒரு நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் வரை தற்காலிக நடவடிக்கையாக நான்கு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலி சப்ரி நிதி அமைச்சராகவும், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும், வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிசும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்கள்.

சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சரவை அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் ஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் புதிய அமைச்சரவையில் பதவிகளை ஏற்கப் போவதில்லை என்று அவர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. தெரிவிக்கின்றன.

No comments