செத்த நாயிலிருந்து உண்ணிகள் கழலுகின்றன!.

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லமான தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சுப் பதவிகளை ஏற்று தேசிய நெருக்கடியை தீர்ப்பதற்கு உதவுமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது

No comments