மகிந்த வீடு செல்லவேண்டும்:அமைச்சர் ராஜினாமா!

 
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவையும் உடனடியாக பதவி விலக வேண்டுமென ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை  அனுப்பிவைத்துள்ளார்.

பதவி விலகியதன் பின்னர்,  அனைத்துக்கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவேண்டும். அதன் அமைச்சரவை  சிறியதாக    அமையவேண்டும்.தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இதில் ஆராயப்படவேண்டும்.” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற நாலக்க கொடஹேவா, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக, அறிவித்துள்ளார்.


நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை  ஏற்படுத்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தேன்.

எனினும், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments