தீ வைத்தவர் கைது என்கிறது அரசு!



ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டபோது எரிபொருள் வாகனத்துக்குத் தீ மூட்டியதாக சந்தேகிக்கப்படும் நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான குறித்த சந்தேகநபரை இன்று கேகாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ரம்புக்கனை சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சாமிந்த லக்ஷானின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் கிரிவட்டுன்ன மயானத்தில் இடம்பெற்றன.
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 41 வயதுடைய சாமிந்த லக்ஷான் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் பொறுமையிழந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சாமிந்த லக்ஷான் உயிரிழந்தார்.

No comments