24 மணி நேரத்தில் புதிய நிதியமைச்சர் பதவி விலகினார்


புதிய நிதியமைச்சர் அலி சப்ரி பதவி விலகியுள்ளார். நேற்று அமைச்சரவை அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருந்த நிலையில் அவருக்கு நேற்று திங்கட்கிழமை சிறீலங்கா அதிபர் முன்னிலையில் புதிய நிதியமைச்சராகப் பதவியேற்றிருந்தார். பதவியேற்று 24 மணி நேரத்தில் அவர் அப்பதவியிலிருந்து விலகுவதாக கோட்டபாயவுக்கு பதவி விலகல் கடித்தத்தை அவர் அனுப்பியிருந்தார். அக்கடித்தில் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

புதிய நிதியமைச்சராக அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இவர் புதிய நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

No comments