வெளியே போய்விடுங்கள்:விமல் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் மீண்டும் அரசாங்கத்தில் இணையத் தயார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் அவரது தரப்பினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் செய்தியை விமல் வீரவன்ச மற்றும் அவரது குழுவினர் நேற்று (16) ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாகவும், நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமல் வீரவன்ச தனது குடும்பத்தில் மூத்த சகோதரர் போன்றவர் என மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச ஒருமுறை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments