மீண்டும் எட்டு மணிநேர மின்வெட்டு!
இலங்கையில் மீண்டும் நாளொன்றுக்கு ஆறு முதல் எட்டு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது என இலங்கை மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி விநியோகம் நீடிக்கப்படாவிட்டால், இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடி காரணமாக அவசியமாக நிலக்கரி பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் ஒகஸ்ட் மாதத்திற்குப் பிறகு நிலக்கரி ஆலையை இயக்க முடியாத நிலை ஏற்படும். மேலும் ஆறு முதல் எட்டு மணி நேர மின்வெட்டை எதிர்பார்க்கலாம் என்று மூத்த மின் பொறியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
டொலர் தட்டுப்பாடு மற்றும் பருவமழை நெருங்கி வருவதால் தட்பவெப்ப நிலையும் மாற உள்ளமையே முக்கிய பிரச்சினைகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment