மரியுபோலில் சரணடைவதற்கான காலக்கெடுவை ரஷ்யா நீட்டித்தது

மரியுபோல் நகரில்  நடந்து செல்லும் ரஷ்ய ஆதரவு செச்சென் படை வீரர்கள்
  • மரியுபோலில் உள்ள வீரர்கள் சரணடைவதற்கான காலக்கெடுவை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஞாயிறு மதியம் வரை ரஷ்யா நீட்டித்துள்ளது.

  • உக்ரைனின் தலைநகர் கீவ்  மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் ரஷ்யா தீவிரமாக்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் உக்ரைனின் இரண்டு இராணுவ தொழிற்சாலைகளை ரஷ்யா தாக்கியது. அதில் ஒன்று டாங்கிகள் மற்றும் கவசவாகனங்களைப் பழுதுபாக்கும் தொழிற்சாலை மற்றது ஏவுகணைகளை உற்பத்தி செய்வதும் பழுது பார்ப்பதுமான தொழிற்சாலைகள் தாக்கப்பட்டது. தலைநகர் கீவின் கிழக்கு புறநகர்ப் பகுதியான ப்ரோவரி மீது ஏவுகணை ஒன்று தாக்கி உள்கட்டமைப்பை சேதப்படுத்தியதாக அதன் மேயர் இகோர் சபோஷ்கோ சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

  • தெற்கு நகரமான மரியுபோல் நகரில், இன்று ஆயுதங்களை கீழே போட்டால் அங்குள்ள உக்ரைன் இராணுவ வீரர்களின் உயிர்களுக்கு உத்தவாதம் அளிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. மரியுபோல் நகரம் பல வாரங்களாக ரஷ்யாவின் முற்றுகைக்கு உட்பட்டுள்ளது. மரியுபோல் பகுதியில் ரஷ்ய தரையிறங்கும் நடவடிக்கைக்கு அதன் கடற்படைப் பிரிவுகள் தயாராகி வருவதாக உக்ரைனின் ஆயுதப் படைகள் கூறுகின்றன. ரஷ்யா துறைமுகத்திற்கு அருகில் தாக்குதல் நடவடிக்கைகளை நடத்தியதாகக் கூறியது. முன்னதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, மரியுபோலில் உக்ரைன் போராளிகளை ஒழிப்பது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறினார்.

  • மேற்கத்திய நாடுகளால் அனுப்பப்பட்ட ஆயுதங்களை ஏற்றிச் சென்ற உக்ரைன் இராணுவ விமானத்தை அதன் வான் பாதுகாப்புப் பிரிவுகள் வீழ்த்தியதாக ரஷ்யா கூறுகிறது. 


No comments