ரஷ்ய அதிபரின் மகள்களை குறி வைத்து புதிய பொருளாதாரக் தடைகள்


உக்ரைனில் ரஷ்யாவால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதினின் இரண்டு மகள்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ரஷ்ய வங்கிகள் மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது.  ரஷ்யாவின் ஸ்பெர் வங்கி, ஆல்பா வங்கி ஆகியவை அமெரிக்க நிதி அமைப்பைத் தொடர்புகொள்ள முடியாது.  இந்த வங்கிகளை அமெரிக்கர்களும் பயன்படுத்த இயலாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த தடைகள் மூலம், புதினின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அமெரிக்க நிதி அமைப்பில் இருந்து நீக்கி, அவர்கள் நாட்டில் வைத்திருக்கும் சொத்துக்கள் முடக்கப்படும்.

பொருளாதாரத் தடைகள் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் மனைவி மற்றும் மகள் மீது விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினின் மகள்கள் மரியா புதினா, கேட்டரினா டிக்கோனோவா.  ரஷிய பிரதமர் மிகைல் மிசுஸ்டின், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவின் மனைவி, குழந்தைகள், முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் உள்ளிட்ட பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களும் அமெரிக்காவின் தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்..

No comments