ராஜபக்ச தரப்பு: தமிழ் தரப்புக்கள் முழு ஆதரவுமுழு அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பு மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தமிழ் தரப்புக்களும் தமது ஆதரவை வழங்கவுள்ளன.

இதேவேளை ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு தேவையான அதிகாரங்களை எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றதுடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

No comments