வடக்கு ஆளுநர் தமிழகம் பயணம்!வடக்கு ஆளுநர் புதிய தொழில்முயற்சியாளர்களை கண்டறியும் முயற்சியாக தமிழகம் பயணித்துள்ளார்.

பொருளாதார சீரழிவுகளை தொடர்ந்து மக்கள் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக கோரி நாள்தோறும் பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் சூழலில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயா தமிழகம் பயணித்துள்ளார்.

; இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார விலை உயர்வு ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் .தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை அளித்து வருகின்றன.

இந்நிலையில் இலங்கை நாட்டின் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று  இந்தியா சென்றுள்ளார். 

இதனிடையே பல தரப்புக்களதும் கோரிக்கைகளையடுத்து தமிழக அரசு சுமார் 40 கோடி பெறுமதியான அரிசி மற்றும் பால்மா உள்ளிட்ட பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க அறிவிப்பு விடுத்துள்ளது.


No comments