இரும்பாலையிலிருந்து ஒரு ஈ கூடத் தப்பக்கூடாது - புதின்


உக்ரேனியத் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையைத் தாக்கும் திட்டத்தை இரத்து செய்யுமாறு ரஷ்ய இராணுவத்திற்கு அதிபர் விளாடிமிர் புட்டின் இன்று வியாழக்கிழமை (21 ஏப்ரல்) உத்தரவிட்டுள்ளார்.

அதற்கு பதிலாக  இரும்பு ஆலையைத் முற்றுகையிட விரும்புவதாகவும் இதற்கான உத்தரவை பாதுகாப்பு அமைச்சரான செர்கே ஷோய்குவிடம் புட்டின் பிறப்பித்தார்.

ஆலையில் நிலத்தடிச் சுரங்கங்களில் உக்ரேனிய வீரர்கள் சுமார் 2,000 பேர் இருப்பதாக அமைச்சர் ஷோய்கு முன்பு அவரிடம் தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவின் உயிரைப் பாதுகாக்க  இரும்பு ஆலையைத் தாக்கவேண்டாம் என்ற முடிவை தாம் எடுத்ததாக அதிபர் புட்டின் தெரிவித்தார்.

இரும்பு ஆலையை இழுத்து முற்றுகையிட்டு மூடுங்கள் ஓர் ஈ கூடத் தப்பிக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

ரஷ்யா அவர்களை மரியாதையுடன் நடத்தும் என்றும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

ரஷ்யா அவர்களை மரியாதையுடன் நடத்தும் என்றும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments