அண்ணன் தம்பி அசைவதாக இல்லை!



சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு தீர்வாக பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு கொள்கையளவில் உடன்படுவதாக ஜனாதிபதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கிணங்க, பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அமைச்சரவை பதவி விலகியதன் பின்னர், உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தின் கட்டமைப்பு குறித்து கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவிருந்த சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடும் கூட்டத்தில் பங்கேற்குமாறு பாராளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

No comments