ஈஸ்டர் வெடிப்பு:மீண்டும் புதைகுழிகள் அகழப்படுகின்றன.ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்கு நீதி கோரி பேராயர் வத்திகானில் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் விசாரணைகைள துரிதப்படுத்தியுள்ளது கோத்தபாய அரசு.

சாரா ஜஸ்மின் என்கிற புலஸ்தினி மகேந்திரனின் டிஎன்ஏ பரிசோதனைக்காக குண்டு வெடிப்பில் பலியானவர்களின் உடல்களை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

அம்பாறை பொது மயானத்தில் இன்று (27) காலை இப்பணி ஆரம்பமாகியுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments