சாண் ஏற முழம் சறுக்கும் கதை!இந்திய உதவியின் கீழ் எரிபொருள் தட்டுப்பாட்டை ஓரளவிற்கு நீக்க இலங்கை அரசு முற்பட்டுள்ள போதும் உள்ளக எதிர்ப்பு அதனை குழப்பிவருகின்றது

 இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் இன்று (30) நள்ளிரவு முதல் நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நிகராக போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்காமல் இருப்பதற்கு எதிராக விடயத்துக்குப் பொறுப் பான அமைச்சருடன் நேற்று (29) நடத்திய கலந்துரையாடல் தீர்வின்றி முடிவுக்கு வந்ததாக அதன் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்தார்.

No comments