உக்ரைனின் வான்வழித் தாக்குதல்! ரஷ்ய எண்ணெய் கிடங்குகள் பற்றி எரிகிறது!!


ரஷ்யாவின்  வான்பரப்புக்குள் புகுந்த உக்ரைனிய உலங்கு வானூர்திகள் ரஷ்யாவின எண்ணெய் கிடங்கு மீது வான்வழியாக தாக்குதல் நடத்தியுள்ளன.  

ரஷ்யாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீதே உக்ரைன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. 

இந்த தாக்குதலில் எண்ணெய் கிடங்கு கொளுந்து விட்டு எரிகிறது. 

இங்கு பணியாற்றிய ஊழியர்களில் இருவர்  காயம் அடைந்துள்ளனர். 

170 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

 உக்ரைன் தாக்குதல் நடத்திய பெல்கோரோட் நகரம் உக்ரைன் - ரஷ்யா எல்லையில் இருந்து 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.

உக்ரைனின் இத்தாக்குதல் அமைதிப் பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் என கிரெம்ளின் கருத்துத் தெரிவித்துள்ளது.

No comments