ரூபிளில் பணம் இல்லை என்றால் எரிவாயு இல்லை! முடியின் புதிய எச்சரிக்கை


ரஷ்யாவிடம் எரிவாயு வாங்கும் ரஷ்யாவின் நண்பர்கள் அற்ற நாடுகள் ரஷ்ய நாணயமான ரூபிளில் பணத்தைச் செலுத்தி எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் இல்லையேல் எரிவாயு நிறுத்தப்படும் என ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இதற்கான ஆணையில் கையெழுத்திட்டார் ரஷ்ய அதிபர் புடின். புதிய சட்டமானது இன்று வெள்ளிக்கிழமை முதல் நடை முறைக்கு வருகிறது.

இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்படும். அவற்றின் மூலம் வெளிநாட்டு பணத்தை ரூபிளாக மாற்றி பணத்தை செலுத்த முடியும். பணத்தை செலுத்தாதவர்களின் ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் என புதிய ஆணையில் பிறப்பிக்கப்படுகிறது.

இதுபற்றி புதின் குறிப்பிடுகையில்:-
 
யாரும் எங்களுக்கு இலவசமாக தரவில்லை.  நாங்கள் தொண்டு செய்வது போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments