அச்சுவேலியிலும் எரிபொருளிற்கான மரணம்! தென்னிலங்கையில் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட வடக்கிலோ எரிபொருளிற்கு காத்திருந்து உயிரிழப்புக்கள் தொடர்கின்றன.

இவ்வார முற்பகுதியில் புன்னாலைக்கட்டுவனில் எரிபொருளிற்கு காத்திருந்த வாகனம் ஏறியதில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

அதனை தொடர்ந்து கிளிநொச்சியில் எரிபொருளிற்காக நாள் முழுவதும் காத்திருந்த மற்றொரு பொதுமகன் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் இன்று மதியம் அசசுவேலிப்பகுதியில் எரிபொருளிற்கு காத்திருந்த பேருந்து ஏறியதில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடக்கில் எரிபொருளிற்காக காத்திருந்து மரணம் சம்பவித்த மூன்றாவது சம்பவம் இதுவாகும்.


No comments