ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்குமாறு உக்ரைன் அதிபர் கோரிக்கை


ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்குமாறு உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காணொளி ஊடாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து அந்நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், உக்ரைனிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ரஷ்ய படைகளை ஆகாயம், கடல், தரை என மூன்று வழிகளிலும் உக்ரைன் இராணுவம் எதிர்கொண்டு வருவதாக கூறிய ஜெலென்ஸ்கி, தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்து, உக்ரைன் வான்பரப்பு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

உக்ரைன் அதிபரின் உரையை பாராட்டிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் உட்பட அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

No comments