எகிப்பதில் 4,600 பழமைவாய்ந்த 5 கல்லறைகள் கண்டுபிடிப்பு
எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலிருந்து மேற்கில் அமைந்துள்ள சக்காரா என்ற பகுதியில் 4,600 ஆண்டுகளுக்கு முன்னரான ஐந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சக்காரா என்பது பழைய இராச்சியத்தைச் சேர்ந்த சேக்கர் கடவுளின் பெயரால் பெயரிடப்பட்ட மெம்பிஸ் கல்லறையின் ஒரு பகுதியாகும்.

சில கல்லறைகள் முக்கிய அரசியல்வாதிகளுக்கானது என்றாலும், ஒன்று ‘யார்ட்’ என்ற ஆணின் மனைவியுடையது. மற்றொன்று ஆறு மீட்டர் நிலத்தடியில் உள்ள செவ்வகக் குழியில் அமைந்துள்ள பெட்டி என்ற பெண்ணுக்கானது என்று கூறப்பட்டுள்ளது.

6 வது வம்சத்தைச் சேர்ந்த மூத்த நபர்களின் நன்கு பாதுகாக்கப்பட்ட மம்மிகளைக் கொண்ட நூற்றுக்கணக்கான வண்ணக் கல்லறைகள் உட்பட சக்காராவில் கடந்த ஆண்டில் பல தொல்பொருள் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

No comments